தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி: இன்றைய புதிய விலை நிலவரம்!

#SriLanka #prices #today #Lanka4 #Gold #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி: இன்றைய புதிய விலை நிலவரம்!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (02) காலை முதல் அதிகரித்துக் காணப்பட்ட தங்கத்தின் விலையில், நண்பகலுக்குப் பின்னர் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 4,03,000 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது. எனினும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் நிலவும் கேள்வி (Demand) ஆகியவற்றுக்கு ஏற்ப, நண்பகலின் பின்னர் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 399,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,875 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் டொலரின் பெறுமதி மாற்றங்களுக்கு அமைய, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இவ்வாறான தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4