11 மாத குழந்தை இறந்த விரக்தியில் 29 வயது பெண் தொழில்நுட்ப வல்லுநர் தற்கொலை
பெங்களூருவில் உள்ள தனது வீட்டில், 11 மாதக் குழந்தை தவறுதலாகத் தண்ணீர் வாளியில் மூழ்கிய சில நிமிடங்களிலேயே, 29 வயதான பெண் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மென்பொருள் வல்லுநரான பிரதிபா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதிபா தனது உலர்ந்த துணிகளை எடுக்க மாடிக்குச் சென்றார்.
அப்போது, அகஸ்தியா என அடையாளம் காணப்பட்ட அந்தக் குழந்தை, துணி துவைக்கும் பகுதிக்குள் தவழ்ந்து சென்று, தவறுதலாகத் தண்ணீர் நிரம்பிய வாளியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பிரதிபா திரும்பி வந்தபோது, தனது குழந்தை வாளியில் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார். குழந்தையின் மரணத்தால் துயருற்ற பிரதிபா, தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு, சில மாத்திரைகளை உட்கொண்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகந்தேஷ் வீட்டிற்குத் திரும்பியபோது, கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அவர்களின் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்த அவர், தனது மனைவியும் குழந்தையும் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
பிரதிபா எழுதிய தற்கொலைக் கடிதம் ஒன்றும், 15 மாத்திரைகளும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
(வீடியோ இங்கே )