வட மாகாண அபிவிருத்தி குறித்து ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் முன்னேற்றச் சந்திப்பு

#SriLanka #NorthernProvince #Meeting #UN #Development #ImportantNews #L4
Lakhi
4 months ago
வட மாகாண அபிவிருத்தி குறித்து ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் முன்னேற்றச் சந்திப்பு

இலங்கைக்கான United Nations வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche அவர்களுடன் இன்று அமைச்சில் பயனுள்ள மற்றும் முன்னோக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டேன். வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கடற்றொழில் துறையின் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தேன்.

குறிப்பாக மயிலிட்டி மற்றும் குருநகர் மீன்பிடித் துறைமுகங்களை மையமாகக் கொண்டு நடைபெறும் பெருமளவிலான திட்டங்கள், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய அடித்தளங்களாக அமையும். மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நவீன வசதிகள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல், உலக வங்கி நிதி ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் குருநகர் துறைமுக மேம்பாட்டு திட்டம், மீன் உற்பத்தி சங்கிலியை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகும்.

மேலும், வடக்கில் முன்னெடுக்கப்படும் வட்டுவாகல் பாலம், “வடக்கு தென்னை முக்கோண” திட்டம், மற்றும் கிவுல் ஓயா திட்டம் போன்றவை பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் துணையாக இருக்கும். வட மாகாணத்தில் உள்ள வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கைத்தொழில் வலயங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் இச்சந்திப்பில் வலியுறுத்தினேன்.

இச்சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு மற்றும் மக்கள் நலனை சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கின் நிலையான அபிவிருத்தி மற்றும் மக்களின் முன்னேற்றம் என்பதே எமது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அந்த நோக்கை அடைவதற்காக சர்வதேச ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு செயல்படுவோம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4