உடல் மற்றும் உள ரீதியான வன்முறையற்ற பாடசாலைச் சூழலை உருவாக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை.

#SriLanka #Lanka4 #education #Ministry #Violence #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
உடல் மற்றும் உள ரீதியான வன்முறையற்ற பாடசாலைச் சூழலை உருவாக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை.

இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மாணவர்களுக்கு எவ்விதமான உடல் அல்லது உள ரீதியான தண்டனைகளை வழங்குவதையும் முற்றாகத் தடைசெய்து கல்வி அமைச்சு புதிய கட்டளையை பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தல் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் வெளியிடப்பட்டுள்ள 11/2026 இலக்க புதிய சுற்றுநிருபத்தின்படி, தண்டனை என்ற பெயரில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, 461/2012 (FR) இலக்க உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் "பூச்சிய சகிப்புத்தன்மை" (Zero Tolerance) கொள்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்: தண்டனை வழங்கும் நோக்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மாணவர்களுக்கு உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது.இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு தண்டனைகளை வழங்குவதை விடுத்து, அவர்களின் நேர்மறையான நடத்தைகளை ஊக்குவிக்கும் முறைகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4