இலங்கைக்கு வருகிறது எரிபொருள் ஏற்றிய கப்பல்: எரிபொருள் விநியோகிக்கும் முறை குறித்து இன்று தீர்மானம்

#SriLanka #today #Lanka4 #Ship #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
இலங்கைக்கு வருகிறது எரிபொருள் ஏற்றிய கப்பல்: எரிபொருள் விநியோகிக்கும் முறை குறித்து இன்று தீர்மானம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி 32,000 லீற்றர் எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் மேலாண் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவிக்கையில், இந்த கப்பலில் 32,000 லீற்றர் டீசலும், 8,000 மெட்ரிக் டொன் ஜெட் ஏ-1 (Jet A-1) வானூர்தி எரிபொருளும் கொண்டு வரப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய தினமும் நாளைய தினமும் ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகள் என்பதால், நாளை எரிபொருள் விநியோகிக்கும் முறை குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாக மயூரு நெத்திகுமார மேலும் தெரிவித்தார். வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் 0, 2, 4, 6, 8 ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், கடைசி இலக்கம் 1, 3, 5, 7, 9 ஆக இருந்தால் ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4