துறைமுகங்களின் தற்போதைய நிலை என்ன? - நாடாளுமன்றத்தில் இன்று நடந்த பரபரப்பு விவாதம்.

#SriLanka #Parliament #Lanka4 #Debate #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
துறைமுகங்களின் தற்போதைய நிலை என்ன? - நாடாளுமன்றத்தில் இன்று நடந்த பரபரப்பு விவாதம்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலைப் பயன்படுத்தி, சில நாடுகள் இலங்கைத் துறைமுகங்களை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதி கோரியமை தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்குப் போரினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தாக்கங்கள் குறித்து நேற்று (29) விசேட அறிக்கையொன்றை வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் இராணுவமயமாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

சில நாடுகள் ஏற்கனவே இலங்கைத் துறைமுகங்களை இராணுவ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளன. இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

யேமனின் ஹவூதி கிளர்ச்சியாளர்கள் பாப் அல்-மண்டேப் (Bab al-Mandab) நீரிணையை மூடுவதாக விடுத்துள்ள எச்சரிக்கை இலங்கையை நேரடியாகப் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.

ஆண்டுதோறும் 25,000 கப்பல்கள் பயணிக்கும் இந்தப் பாதை முடக்கப்பட்டால், கப்பல்கள் மாற்று வழிகளைத் தேடும். இது இலங்கைத் துறைமுகங்களின் வருமானத்தைப் பாதிக்கும். போர் அபாயக் காப்புறுதி (War Risk Premium) அதிகரிப்பதன் காரணமாக இறக்குமதிச் செலவு அதிகரிக்கும் . 

இது இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து, பணவீக்கத்தை (Cost-push inflation) உருவாக்கும். மத்திய கிழக்குப் போர் நீடிப்பதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறைவடைவதோடு, இறக்குமதிக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள இப்புதிய மாற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்திலோ அல்லது நாட்டுக்கோ உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை உடனடியாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கோரிக்கை விடுத்தார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4