மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு ஏப்ரல் 13 வரை விளக்கமறியல்!

#SriLanka #Lanka4 #Traffic #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு ஏப்ரல் 13 வரை விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாகனப் பதிவு நடைமுறைகளில் முறைகேடுகள் செய்தமை மற்றும் வாகனங்களின் சேஸ் (Chassis) இலக்கங்களை மாற்றியமைத்து சட்டவிரோதப் பதிவுகளுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கடந்த வெள்ளிக்கிழமை (27) இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று குருணாகல் - பிலெஸ்ஸ (Pilessa) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை ஏப்ரல் 10-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.


செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4