நாட்டில் நடந்த விசேட சுற்றிவளைப்பில் 635 சந்தேகநபர்கள் கைது

#SriLanka #Arrest #Police #island #drugs #Lanka4 #search #L4
Prasu
4 months ago
நாட்டில் நடந்த விசேட சுற்றிவளைப்பில் 635 சந்தேகநபர்கள் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது நேற்று 635 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது 29,191 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் இந்த எண்ணிக்கையிலான சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 126 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 197 பேரும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 82 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,643 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4