பிரித்தானியாவில் ஹமாஸுக்கு ஆதரவு திரட்டிய பெண் மருத்துவர் கைது

#Arrest #Women #doctor #Lanka4 #England #Hamas #L4
Prasu
3 months ago
பிரித்தானியாவில் ஹமாஸுக்கு ஆதரவு திரட்டிய பெண் மருத்துவர் கைது

பிரித்தானியாவில் ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக தேசிய சுகாதாரச் சேவை பெண் மருத்துவர் ஒருவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய கைதுகளைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட காவல்துறை பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 31 வயதான மருத்துவர் ரஹ்மே அலத்வான் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு குளோசெஸ்டர்ஷையரின் பில்னிங்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பெருநகர காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் மத்திய லண்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4