உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படபோகும் இலங்கை!

#SriLanka #rice #prices #Food #ImportantNews #L4
Lakhi
4 months ago
உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படபோகும் இலங்கை!

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக மூடப்பட்டால் இந்நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிறுவனம் (Kiel Institute for the World Economy) நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்த நீரிணை முடக்கப்பட்­டால் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது (30% விலை உயர்வு). ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் மற்றும் எரிவாயு மட்டுமன்றி உலகளாவிய விநியோகச் சங்கிலிக்குத் தேவையான உரங்கள் மற்றும் இரசாயனங்களும் பெருமளவில் கொண்டு செல்லப்படுகின்றன.

குறிப்பாக விவசாயத்திற்கு அத்தியாவசியமான யூரியா உள்ளிட்ட பெட்ரோ கெமிக்கல் உரங்களின் உற்பத்தியில் வளைகுடா நாடுகள் முன்னணியில் உள்ளன. பிபிசி வெரிஃபை (BBC Verify) தரவுகளின்படி போருக்கு முன்னதாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணித்த இந்த நீரிணையில் தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களே பயணிக்கின்றன. இதனடிப்படையில் இந்த விநியோகத் தடை இலங்கையின் விவசாய உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4