சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்பு - சாரதி கைது

#Jaffna #Arrest #Kilinochchi #drugs #Lanka4 #Smuggling #L4
Prasu
4 months ago
சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்பு - சாரதி கைது

சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று இரவு இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வாகனம் ஒன்றில் சூட்சுமமாக கஞ்சா பொதி கடத்தப்படுவதாக கிளிநொச்சியில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து மறைத்து சோதனை செய்ய முற்பட்ட போது, குறித்த வாகனம் நிறுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டது.

குறித்த வாகனத்தை சுரத்திச் சென்று இடை மறித்து சோதனை மேற்கொண்ட போது, 17 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 கிலோ எனவும், இதன் பெறுமதி சுமார் 60 லட்சத்துக்கு அதிகமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட பொதி மற்றும் வாகனத்தையும் அதன் சாரதியையும் கிளிநொச்சி ஜெயபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4