நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்! கொடூர கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகப் போராட்டம்.

#SriLanka #Protest #Murder #Lanka4 #Brutal #family #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்! கொடூர கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகப் போராட்டம்.

மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி கோரி இன்று (27.03.2026) காந்திப்பூங்காவில் நடைபெற்ற அமைதியான கண்டனப் பேரணியில் நான் நேரடியாக கலந்து கொண்டேன். 

இந்தப் பேரணியில் பொதுமக்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்களும் பெரும் வேதனையுடன் இணைந்திருந்தனர். பொலிசார் குற்ற நடவடிக்கைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறான பாரிய குற்றங்கள் இடம் பெறாமல் தடுக்க முடியும்.

இந்தச் சம்பவம் ஒரு குடும்பத்தின் துயரமாக மட்டுமல்ல, முழு சமூகத்தின் மனதை உலுக்கும் ஒரு அநீதி என்பதையும் நான் அங்கு வலியுறுத்தினேன்.

நீதி கிடைக்கும் வரை இந்தக் குரல் மௌனமாக மாறாது என்பதையும் உறுதியாக தெரிவித்தேன். பின்னர், காந்திப்பூங்காவிலிருந்து பழைய கச்சேரி வரை பேரணியாகச் சென்று, மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து, சம்பவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் உறவினர்களின் கோரிக்கைகளை முன்வைத்தோம்.

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கும் நான் அழைத்துச் சென்றேன். 

அங்கு, ஜனாதிபதிக்கான மகஜரை, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி அவர்களிடம் அவர்கள் நேரடியாக வழங்கும் வகையில் ஏற்பாடு செய்தேன்.

இந்தச் சம்பவத்திற்கு உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பது என் வலியுறுத்தலாகும். 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இந்த மண்ணில் ஒரு உயிர் அநியாயமாக பறிக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும், நாம் எல்லோரும் பொறுப்பு உடையவர்களாகிறோம். 

ஆகவே, நீதி நிலைநிறுத்தப்படும் வரை, உண்மை வெளிச்சத்திற்கு வரும் வரை, எமது குரல் மௌனமாக இருக்காது. நீதிக்காக ஒன்றுபடுவோம். மனிதத்துவத்தை காப்போம்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4