கனடாவில் வீடற்ற முதியவர்கள் இருவர் மரணம் - நகர மேயர் கவலை
#Death
#Canada
#people
#Lanka4
#Old
#L4
Prasu
1 month ago
கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீருடன் இந்த செய்தியை அறிவித்த நகர மேயர் சொராயா மாரிடென்ஸ், இந்த மரணங்கள் குறித்து மேலும் விவரங்களை வெளியிட முடியாது என்றும் இத்தகைய துயரமான சூழலில் வீடற்றோர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிடுவது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.அதே நேரத்தில் இந்த சம்பவம் வீடற்றோர் பிரச்சினையை தீர்க்கும் அவசியத்தை வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
“நம்மிடம் உயிர்களை காப்பாற்றும் வளங்கள் இருந்தும், மனிதர்களை இழப்பது சாதாரணம் அல்ல,” என்று மேயர் வலியுறுத்தினார்.
2024ம் ஆண்டில் மட்டும் 108 வீடற்றோர் உயிரிழந்த நிலையில், இப்போது மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியிருப்பது சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் அவசர நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்துகிறது.
(வீடியோ இங்கே )