இனிப்பு பண்டங்களின் விலை மாற்றம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

#SriLanka #prices #Lanka4 #Sweets #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
இனிப்பு பண்டங்களின் விலை மாற்றம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களின் விலைகள் எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கம் உறுதியளித்துள்ளது.

வர்த்தக அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தையில் மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மே மாதம் வரை தற்போதுள்ள விலைகளிலேயே இந்த உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4