சர்வதேச சந்தையில் எகிறும் தங்க விலை - ஒரே நாளில் அதிரடி மாற்றம்!!
#prices
#International
#Lanka4
#Gold
#Market
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 54.18 டொலர்கள் அதிகரித்து 4,437.16 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 1.24% அதிகரிப்பாகும். அதேபோல், வெள்ளி விலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.48 டொலர்களால் அதிகரித்து 69.31 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது, 2.17% அதிகரிப்பாகும்.
சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், கடந்த சில நாட்களாக உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்