இன்றைய ராசிபலன் (27.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: தடை விலகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திடீர்என வந்த நெருக்கடி குறையும். பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உடன் பணிபுரிவோர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். கார்த்திகை 1: நினைத்ததை நடத்தி முடிப்பீர். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தாய்வழியில் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: முயற்சியால் வெற்றி காணும் நாள். உங்களுக்குள் இருந்த குழப்பம் நீங்கும். இழுபறி வேலை நடக்கும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் சரியாகும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை மனதில் பதட்டம் இருக்கும். தெளிவு உண்டாகும். திருவாதிரை: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.
கடகம்
புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பூசம்: குடும்பத்தினரின் விருப்பம் நிறைவேறும். நேற்று இழுபறியான வேலை இன்று முடியும். வியாபாரத்தில் லாபம் கூடும். ஆயில்யம்: எச்சரிக்கையுடன் செயல்படுவீர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். பயணம் லாபம் தரும்.
சிம்மம்
மகம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சியில் லாபம் உண்டாகும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மதியத்திற்கு மேல் திடீர் செலவு தோன்றும். உத்திரம் 1: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். நீங்கள் விரும்பிய லாபத்தை இன்று அடைவீர். உறவினர் வீடுதேடி வருவர்.
கன்னி
உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நெருக்கடி நீங்கும். அஸ்தம்: அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர். நண்பர்கள் உதவியால் வேலையில் லாபம் அடைவீர். சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். பழைய கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். புதிய முயற்சி வேண்டாம்.
துலாம்
சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர். புதிய முயற்சியில் ஈடுபடுவீர். சுவாதி: விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். விற்பனை அதிகரிக்கும். விசாகம் 1,2,3: முயற்சியில் கவனம் செலுத்துவீர். தொழில் முன்னேற்றம் அடையும். செலவிற்கேற்ற வருமானம் வரும்.
விருச்சிகம்
விசாகம் 4: தெளிவுடன் செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். இன்று மதியத்திற்கு மேல் லாபமாகும். அனுஷம்: சங்கடம் விலகும். மனக்குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். கேட்டை: எதிர்ப்பு விலகும். பெரிய மனிதர் ஆதரவால் வேலை நடக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.
தனுசு
மூலம்: நன்மையான நாள். உங்கள் செயல்களில் மதியம் வரை லாபம் காண்பீர். முயற்சி வெற்றியாகும். பூராடம்: மதியத்திற்கு மேல் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரிகள் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பிறரிடம் வாக்கு வாதம் வேண்டாம்.
மகரம்
உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். முயற்சி வெற்றியாகும். திருவோணம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தடைபட்ட வேலை நடக்கும். செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரி விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.
கும்பம்
அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உடல்நிலை சீராகும். வேலைகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர். சதயம்: நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். போட்டியாளர் விலகுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். வரவு அதிகரிக்கும்.
மீனம்
பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். பிரச்னை தேடி வரும்.
உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர் உதவியால் வேலை வெற்றியாகும்.
ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர்.
(வீடியோ இங்கே )