கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இந்திய இளைஞர் மரணம்

#Death #Canada #GunShoot #Indian #L4
Prasu
3 months ago
கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இந்திய இளைஞர் மரணம்

கடந்த வாரம் கனடாவின் எட்மண்டன் நகருக்கு தெற்கே உள்ள ராணி எலிசபெத் நெடுஞ்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 22 வயது இந்திய இளைஞர் பிரிந்தர் சிங் கொல்லப்பட்டுள்ளார்.

மார்ச் 14ம் திகதி பிரிந்தர் சிங் தன்னுடைய இந்திய நண்பர்கள் இரண்டு பேருடன் ஹோண்டா சிவிக் காரில் லெடியூக் நெடுஞ்சாலையில் மலைப் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அருகே பிக்கப் டிரக் ஒன்று வந்த நிலையில், அதிலிருந்த நபர் இளைஞர்களிடம் “சமாதானச் சிக்னலை” காட்டியுள்ளார். பதிலுக்கு காரை ஓட்டிச் சென்ற பிரிந்தர் சிங்கும் நட்பை வெளிப்படுத்தும் விதமாக கை சைகையை காட்டியுள்ளார். 

ஆனால் அடுத்த சில வினாடிகளில் பிக்கப் டிரக்கில் இருந்த நபர் பிரிந்தர் சிங்கை சுட்டு விட்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.

கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். 

காரில் சுற்றுலா சென்ற மூன்று இளைஞர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள், உயிரிழந்த பிரிந்தர் சிங் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்காக சர்வதேச மாணவராக கனடாவிற்குள் குடிபெயர்ந்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4