மட்டக்களப்பில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு!

#SriLanka #Batticaloa #Death #Women #husband #fire #ImportantNews #L4
Lakhi
3 hours ago
மட்டக்களப்பில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எரிகாயங்களுக்குள்ளான மனைவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி இரண்டு மாதத்தின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (24 உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இம்பமலர்தேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி 17 ம் திகதி மனைவியின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் அவர் எரிகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் ஏப்ரல் 26 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .

இந்த நிலையில் படுகாயமடைந்த பெண் 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் சம்பவ தினமான இன்று காலையில் வீட்டில் உயிரிழந்தார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!