பாடசாலை மாணவிகளுக்கு நற்செய்தி: இலவச சுகாதார பொதி வழங்கும் திட்டம் 2026 இலும் அமுல்.
#SriLanka
#School
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
1 month ago
வயது வந்த பாடசாலை மாணவிகளின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டிலும் அவர்களுக்கு இலவச சுகாதார நாப்கின் (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பாடசாலைகளில் தரம் 6 இற்கு மேல் கல்வி பயிலும் சுமார் 1.05 மில்லியன் (10 இலட்சத்து 50 ஆயிரம்) மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்