வைக்கோல் தீயை அணைக்க முயன்ற முதியவர் உயிரிழப்பு
#SriLanka
Lakhi
3 hours ago
ஹம்பாந்தோட்டை - வீரவில, கங்கசிறிகம பகுதியில், தீ விபத்தில் சிக்கி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம, கங்கசிறிகம பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனக்குச் சொந்தமான வயலில் இருந்த வைக்கோலுக்குத் தீ வைத்துள்ளார்.
அந்தத் தீ ஏனைய வயல் பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க அவர் முயற்சித்த போதே, தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக திஸ்ஸமஹாராம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்