இலங்கை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
இலங்கை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா (Masato Kanda), உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை (23) இலங்கை வந்தடைந்தார்.

இந்த விஜயம் குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர், இலங்கை நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் இந்த முக்கியமான தருணத்தில் நான் கொழும்பு வந்தடைந்துள்ளேன். 

விமான நிலையத்தில் இலங்கையின் தொழிலாளர் அமைச்சரும், நிதி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் நான் அன்புடன் வரவேற்கப்பட்டேன்.

அதே சமயம், அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான முன்னுரிமைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக, அரசாங்கம், தனியார் துறை மற்றும் களத்தில் உள்ள சமூகங்களுடன் கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த வருகை அமைந்துள்ளது.

மேலும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதற்காக முதலீடுகளைத் திரட்டும் அதே வேளையில், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் மாற்றத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

வரும் நாட்களில் இந்த முன்னுரிமைகளை நாம் இணைந்து முன்னெடுத்துச் செல்வோம் என நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – என்றார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!