நூற்றாண்டு கால விதியை உடைத்த அமெரிக்கா - ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வெளியீடு

#world_news #Gold #Old #Rule #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4 #DonaldTrump
Abi
3 months ago
நூற்றாண்டு கால விதியை உடைத்த அமெரிக்கா - ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வெளியீடு


அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 கரட் தங்க நாணயத்தை வெளியிடுவதற்கு அமெரிக்க கூட்டாட்சி கலை ஆணைக்குழு (Federal Commission of Fine Arts) ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்க கூட்டாட்சி சட்டத்தின்படி, உயிருடன் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் உருவத்தை அந்நாட்டு நாணயங்களில் பயன்படுத்துவதற்கு பொதுவாக அனுமதி இல்லை. 

இருப்பினும், அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட்டிற்கு (Scott Bessent) வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நினைவு நாணயம் வெளியிடப்படவுள்ளதாக பிபிசி (BBC) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் உயிருடன் இருந்த காலத்தில் நாணயமொன்றில் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் (Calvin Coolidge) மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாணயச் சபையினால் (US Mint) முன்வைக்கப்பட்ட இந்த நாணயத்தின் வடிவமைப்பில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு மேசை மீது கைகளை ஊன்றி நிற்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தை 3 அங்குல விட்டம் கொண்டதாக (அதிகபட்ச அளவு) வடிவமைக்க ஆணைக்குழுவின் துணைத் தலைவர் ஜேம்ஸ் மெக்ரேரி பரிந்துரைத்துள்ளார்.

இது சாதாரண அமெரிக்க 'குவாட்டர்' நாணயத்தை விடவும் பெரியதாகும்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4