வடமராட்சி கிழக்கில் பீதி - பின்னணியில் மர்மம் இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு.

#SriLanka #people #Elephant #East #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
வடமராட்சி கிழக்கில் பீதி - பின்னணியில் மர்மம் இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணாப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. 

குறித்த சம்பவம் அப்பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களம் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கி விடப்பாட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கில் சுண்டிகுளத்திலிருந்து வெற்றிலைக்கேணி வரை வன ஜீவ ராசிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அப் பிர தேசங்களில் இதுவரை யானைகள் அங்கு காணாப்பாட்டிருக்கப்படவில்லை. 

இந் நிலையில் குறித்த யானைகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பாட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு ஒரு யானை தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பட்ட யானை ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணமடைந்தது குறிப்பிட தக்கது

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4