கனடாவில் ரயில் விபத்தில் 12 வயது சிறுவன் மரணம்

#Death #Canada #Accident #Train #L4
Prasu
3 months ago
கனடாவில் ரயில் விபத்தில் 12 வயது சிறுவன் மரணம்

கனடாவில் மிசிசாகாவில் இடம்பெற்ற கோரமான ரயில் விபத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

மிசிசாகாவின் லேக்ஷோர் ரோடு ஈஸ்ட் பகுதிக்கு வடக்கே உள்ள அலெக்ஸாண்ட்ரா அவென்யூ ரயில்வே சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த 'கோ ரயில்' அந்த சிறுவன் மீது மோதியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் சிறுவன் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

விபத்து நடப்பதற்கு முன்னதாக, அந்த சிறுவனும் மற்றொரு சிறுவனும் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

விபத்து நடந்த போது அங்குள்ள ரயில்வே சிக்னல்கள் சரியாகச் செயல்பட்டன. எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, தடுப்பு கம்பிகளும் இறக்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்த சிறுவன் அந்தத் தடையைத் தாண்டிச் செல்ல முயன்றபோது ரயில் மோதியதாகத் தெரிகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4