எரிபொருள் அனுமதிப்பத்திர முறை குறித்து முழு விளக்கம்

#SriLanka #government #Fuel #QRcode #L4
Prasu
3 hours ago
எரிபொருள் அனுமதிப்பத்திர முறை குறித்து முழு விளக்கம்

இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர(Fuel Pass) முறைமையில் நிலவும் சந்தேகங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமது எரிபொருள் QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான விரிவான வழிகாட்டல் இதோ:

எனது வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கம் மாறவில்லை என்பதால், பழைய QR குறியீட்டைத் தொடர்ந்து பயன்படுத்த முடியுமா?

  • ஆம், ஏற்கனவே உள்ள QR குறியீடுகள் செல்லுபடியாகும். உங்கள் பதிவு செய்யப்பட்ட அலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைந்து (Login) உங்கள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

பழைய உரிமையாளரிடம் இருந்து வாங்கிய வாகனத்திற்கு எனது பெயரில் புதிய QR குறியீட்டை எவ்வாறு பெறுவது?

  • புதிய QR குறியீட்டைப் பெற இணையதளத்தில் வாகனத்தை மீண்டும் பதிவு (Register) செய்ய வேண்டும். இந்த வசதி 2026 மார்ச் 17 முதல் கிடைக்கும்.

எனது வாகனம் புதிய உரிமையாளருக்கு மாற்றப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் பழைய அலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி உள்நுழைந்து (OTP மூலம்), "Delete Profile" என்ற தெரிவை அழுத்தி பழைய QR குறியீட்டை நீக்க வேண்டும். அப்போதுதான் புதிய உரிமையாளர் தனது பெயரில் புதிய QR குறியீட்டைப் பதிவு செய்ய முடியும். அதன் பிறகு, நீங்கள் வாங்கும் புதிய வாகனத்தை அதே அலைபேசி இலக்கத்தில் பதிவு செய்யலாம். இதுவும் 2026 மார்ச் 17 முதல் நடைமுறைக்கு வரும்.

எனது தொலைபேசி இலக்கம் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் செயலிழந்திருந்தால் (Recycled) என்ன செய்வது?

  • புதிய QR குறியீட்டைப் பெற இணையதளத்தில் உங்கள் வாகனத்தை மீண்டும் பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி 2026 மார்ச் 17 முதல் கிடைக்கும்.

புதிதாக வாங்கிய (Brand-new) வாகனத்திற்கு QR குறியீட்டை எவ்வாறு பெறுவது?

  • அனைத்துப் புதிய வாகனங்களும் 'Fuel Pass' இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், 2026 மார்ச் 17 அன்று மீண்டும் முயற்சி செய்யவும்.

பதிவு செய்யும் போது செஸி இலக்கம் (Chassis Number) தவறானது என வந்தால் என்ன செய்வது?

  • வாகனத்தின் அசல் உரிமையாளர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) ஊடாக வாகன விபரங்களைத் திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.

வாகனம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது (Vehicle Already Registered) என வந்தால் என்ன செய்வது?

  • தயவுசெய்து இன்று (2026 மார்ச் 17) மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்.

50cc-க்கு குறைவான வாகனங்களை எவ்வாறு பதிவு செய்வது?

  • மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (DMT) பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) இணையதளம் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது?

  • தற்போது இணையதளம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், சில நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் முயற்சிக்கவும்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகே OTP இலக்கம் கிடைத்தால் என்ன செய்வது?

  • OTP இலக்கம் காலாவதியான பிறகு கிடைத்தால், 'Resend' பொத்தானை அழுத்தி புதிய OTP இலக்கத்தைக் கோரலாம்.

ஒரே தேசிய அடையாள அட்டையின் (NIC) கீழ் பல வாகனங்களைப் பதிவு செய்ய முடியவில்லையே?

  • தற்போதைய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ், ஒரு தேசிய அடையாள அட்டை மற்றும் ஓர் அலைபேசி இலக்கத்திற்கு ஒரு வாகனம் மட்டுமே பதிவு செய்ய முடியும். மற்றுமொரு வாகனத்தைப் பதிவு செய்ய வேறொரு அடையாள அட்டை மற்றும் அலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ஜெனரேட்டர் (Generator) போன்ற வாகனமல்லாத தேவைகளுக்கு QR குறியீட்டைப் பெற முடியுமா?

  • தற்போதைய நிலையில் இந்த முறைமை வாகனப் பதிவுகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அல்லாத தேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் குறித்து இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால அறிவுறுத்தல்களுக்கு அமைய அறிவிக்கப்படும்.

எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையைப் பயன்படுத்த ஸ்மார்ட் தொலைபேசி (Smartphone) அவசியமா?

  • கட்டாயமில்லை. கணினி அல்லது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர் ஒருவரின் உதவியுடன் பதிவுகளை மேற்கொள்ள முடியும். பதிவு செய்த பின்னர், உங்களது QR குறியீட்டை அச்சிட்டு (Print out) வைத்துக்கொள்வதன் மூலம் அதனை எரிபொருள் நிலையங்களில் பயன்படுத்தலாம்.

இணையதளத்தில் மொழிகளை மாற்ற முடியுமா?

  • ஆம். எரிபொருள் அனுமதிப்பத்திர இணையதளமானது தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சேவைகளை வழங்குகிறது.

வாகனத்தின் செஸி இலக்கத்தை (Chassis Number) எங்கே கண்டறியலாம்?

  • வாகனப் பதிவுப் புத்தகம் (CR Book), காப்புறுதி ஆவணங்கள் (Insurance) அல்லது வாகனத்தின் குறிப்பிட்ட பாகங்களில் செதுக்கப்பட்டுள்ள இடங்களின் மூலம் சேஸ் இலக்கத்தை அறிந்துகொள்ளலாம்.

சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி இலக்கம் எது?

  • எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், 1919 என்ற இலக்கத்தை அழைத்து மேலதிக உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் மேலதிக உதவி மையங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

சுற்றுலா மற்றும் வணிக வாகனங்களுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு (Quota) வழங்கப்படுமா?

  • சுற்றுலாத்துறை மற்றும் வணிகப் போக்குவரத்து போன்ற அதிக எரிபொருள் தேவைப்படும் துறைகளின் தேவைகள் குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்யும். அதற்கேற்ப உரிய மாற்றங்கள் அல்லது மேலதிக உதவிகள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!