ஏப்ரல் முதல் மீண்டும் மின்வெட்டு? நுரைச்சோலை பின்னடைவால் எச்சரிக்கை!

#SriLanka #NuwaraEliya #Warning #power cuts #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
ஏப்ரல் முதல் மீண்டும் மின்வெட்டு? நுரைச்சோலை பின்னடைவால் எச்சரிக்கை!

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். 

இதற்கான தரவுகளையும் அவர் சபையில் முன்வைத்தார்.

மார்ச் 13: 130 மெகாவோட் குறைவு

மார்ச் 14: 135 மெகாவோட் குறைவு

மார்ச் 15: 132 மெகாவோட் குறைவு

மார்ச் 16: 148 மெகாவோட் குறைவு

இவ்வாறு நுரைச்சோலையில் ஏற்படும் மின் உற்பத்தி வீழ்ச்சியை ஈடுகட்ட, டீசல் மின் நிலையங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும், நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த மாற்று வழியிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த நிலைமை தொடருமாயின், எதிர்வரும் ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் உருவாகலாம் என அவர் தெரிவித்தார்.

இந்த அபாயகரமான நிலையைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாகத் தீர்வைக் காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4