சுகாதார ஊழியர்களுக்கு தடையின்றி எரிபொருள்: அமைச்சின் முக்கிய நடவடிக்கை.

#SriLanka #Health #Ministry #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
சுகாதார ஊழியர்களுக்கு தடையின்றி எரிபொருள்: அமைச்சின் முக்கிய நடவடிக்கை.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர். முறைமையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் அளவு, பல்வேறு தொழில்சார் தேவைகளைக் கருத்தில் கொண்டு விரைவில் திருத்தப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள கவலைகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு ஒரு ஆரம்பக் கட்டமே எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், சில துறையினரின் தேவைகள் ஆராயப்பட்டு புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படும் என உறுதி அளித்தார்.

மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள், விவசாயத் துறையில் ஈடுபடுபவர்கள், வாடகை வாகனங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் என்பன இதன்போது கவனத்தில் கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.

உடனடியாக அமுல்படுத்தப்பட்ட இந்த ஒதுக்கீட்டு முறை குறித்து அச்சமடைய வேண்டாம் எனவும், அடுத்த சில நாட்களில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுகாதாரத் துறையினரைக் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்படும் 5 லீற்றர் எரிபொருள் களப்பணிகளை மேற்கொள்ளப் போதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாராந்த ஒதுக்கீட்டை 5 லீற்றரிலிருந்து 10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அரசு மற்றும் மாகாண அரசு தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4