மார்ச் 17, 1996: உலகை அதிரவைத்த இலங்கையின் வரலாற்று உலகக் கிண்ண வெற்றி!
#SriLanka
#world_news
#history
#Srilanka Cricket
#Cricket
#WorldCup
#ImportantNews
#L4
Lakhi
1 hour ago
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினம் இன்று.
30 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (மார்ச் 17, 1996) அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் உலகக் கிண்ணத்தை வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
1996 மார்ச் 17 அன்று பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தநிலையில் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 242 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
அர்ஜுன ரணதுங்க உலகக் கிண்ணத்தை ஏந்திய அந்த தருணம், இலங்கை விளையாட்டுத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது.
இன்றும் அந்த வெற்றி ஒவ்வொரு இலங்கை இரசிகனின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இலங்கை ஒரு சிறிய தீவு நாடாக இருந்து உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மிக முக்கியமான தருணம் இதுவாகும்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்