திட்வா சூறாவளி நிவாரணப் பொருட்களை பதுக்கிய இரண்டு பெண் அபிவிருத்தி அதிகாரிகள் கைது

#Arrest #Women #Food #officer #Relief #L4
Prasu
4 months ago
திட்வா சூறாவளி நிவாரணப் பொருட்களை பதுக்கிய இரண்டு பெண் அபிவிருத்தி அதிகாரிகள் கைது

அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவில் திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களை அவர்களது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் அரநாயக்க பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலைப் பொறுப்பாளராகவும் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் மற்றும் பல நிறுவனங்களால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கேகாலை மேலதிக மாவட்ட செயலாளர் திலித் நிஷாந்தவிற்கு கிடைத்த தகவலையடுத்து, கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம்.ஹேரத்தின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், அரநாயக்க பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு விசாரணையின் போது, ​​அதிகாரிகளின் குடியிருப்புகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தனிப்பட்ட மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றதுடன், கைப்பற்றப்பட்ட நிவாரணப் பொருட்களின் பெறுமதியை மதிப்பிடவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4