சுவிஸ் மக்களே அவதானம் - கடும் பனி அபாயம்

#Switzerland #Warning #Climate #Snow #L4
Prasu
1 hour ago
சுவிஸ் மக்களே அவதானம் - கடும் பனி அபாயம்

வணக்கம் லங்கா4 ஊடக நேயர்களே. மீண்டும் ஒரு சுவிஸ் செய்தியோடு சந்திக்கின்றோம். 

இந்தச் செய்தி வளமைக்கு மாறாக சுவிட்சர்லாந்து நாட்டில் இந்த மார்ச் மாதத்தில் அதிகமாக பனிப்பொழிவு ஏற்படப்போவதாக ஒரு எச்சரிக்கையான பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார்கள். 

வலே காண்டோனில் ஒன்றரை மீட்டருக்கு மேல் உயரமாக பனிகள் கொட்டப்பட்டிருக்கிறது. அது வெள்ளிக்கிழமை இரவு கொட்டப்பட்டிருக்கிறது. 

சனிக்கிழமை காலையிலே நிரம்பி வீடுகளை மூடி வாகனங்களை மூடியிருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருந்திருக்கிறது. அத்தோடு ஏனைய மாநிலங்களில் அதிகமாக மலைப் பிரதேசத்தை அண்டிய இந்த மாநிலங்களிலே அதிகமாக பனிப்பொழிவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. 

அனைத்து ஊடகங்களிலேயும் இந்தச் செய்திகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல புகைப்படங்களும் சுவிஸ் தொடர்பான செய்திகளை ஒளிபரப்புகின்றன. 

அதாவது வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் என்று பல இடங்களிலே இந்தச் செய்தி முதன்மையை பிடித்திருக்கிறது. 

இந்நிலையில், தொடர்ந்தும் சனிக்கிழமை இரவும் அதிகமாக பனிப்பொழிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. 

அந்த வகையிலே லங்கா4 ஊடகம் உங்களுக்கு முதன்மையாக சுவிட்சர்லாந்திலே இருக்கின்ற மக்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்கின்றது.

நீங்கள் அவதானமாக இருந்துகொள்ளுங்கள். உங்களுடைய பயணங்களைத் திட்டமிடுகின்ற பொழுது எந்தத் திசையில் திட்டமிட முடியும், எந்தத் திசையில் திட்டமிட வேண்டாம்.

எந்தத் திசையில் போகலாம், போகக் கூடாது அல்லது இடையிலே நின்றால் என்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை சுவிஸ் காலநிலையைப் பார்த்து உங்களுடைய பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தயவு செய்து இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து நீங்களும் சுவிட்சர்லாந்திலே இருக்கின்ற, அதாவது பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மன் மொழியிலே இருக்கின்ற ஒவ்வொரு ஊடகங்களிலேயும் சேர்ந்து உண்மைச் செய்திகளைப் பார்த்து அதே வழியிலே காலநிலையையும் பார்த்து உங்களுடைய வேலைக்குச் செல்வது அதற்கு வேலைக்குச் செல்லாமல் நிற்பது நல்லது.

சில வேளைகளில் இரவிலே பனி பெய்யத் தொடங்கினால் வாகன ஓட்டம் கூட மிக மிகக் கடினமாக இருக்கும். இது கடந்த முப்பத்தைந்து, நாற்பது வருடங்களாக சுவிட்சர்லாந்திலே இருப்பவர்களைப் பார்த்து அறிந்து கொண்ட விடயம்.

அதனால் நீங்கள் அவதானமாக இருங்கள். உங்களுடைய பயணத்தைச் சரியாகத் திட்டமிட்டு சுவிஸ் காலநிலையைப் பார்த்து நீங்கள் திட்டமிடுமாறு தயவு செய்து உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். லங்கா4 ஊடகம் இலங்கையன்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!