இன்றைய ராசிபலன் (14.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (14.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம் 

அசுவினி: எடுத்த வேலைகள் ஆதாயம் தரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பரணி: வெளி வட்டாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உழைப்பாளர்களுக்கு வருவாய் கூடும். கார்த்திகை 1: பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சிரமம் விலகும். 

ரிஷபம் 

கார்த்திகை 2,3,4: வேலையில் காலை வரை இழுபறி இருக்கும். அதன்பின் நிம்மதி உண்டாகும். ரோகிணி: மனதில் நிலவிய குழப்பம் விலகும். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: சந்திரன் பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால் நேற்றைய நெருக்கடி நீங்கும். 

மிதுனம் 

மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் தோன்றும். திருவாதிரை: வியாபாரத்தில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவது நன்மையாகும். புனர்பூசம் 1,2,3: வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். நிதானம் தேவை. 

கடகம்

புனர்பூசம் 4: அவசரத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். பூசம்: உடல்நிலை சீராகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஆயில்யம்: வியாபார போட்டியாளர் உங்களிடம் சமாதானம் பேசுவர். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

சிம்மம்

மகம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பூரம்: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்னை தீரும். உத்திரம் 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கையில் பணப்புழக்கம் இருக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சித்திரை 1,2: வியாபாரிகள் தங்களிடம் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம் 

சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும். உதவி புரிவதாக சொன்னவர் உங்களைத் தேடிவருவார். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு திருப்தி தரும். விசாகம் 1,2,3: உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 

விருச்சிகம் 

விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு வரும். அனுஷம்: எடுக்கும் வேலை லாபமாகும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். கேட்டை: பணியிடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம். 

தனுசு

மூலம்: உங்கள் நிலை உயரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பூராடம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகள் தீரும். உத்திராடம் 1: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். உறவினர் ஆதரவு கிடைக்கும். 

மகரம் 

உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள். திருவோணம்: காலை வரை வேலையில் நெருக்கடி இருந்தாலும், அதன்பிறகு முன்னேற்றம் உண்டாகும். அவிட்டம் 1,2: அடுத்தவரை நம்பி எந்த வேலையிலும் இன்று இறங்க வேண்டாம். 

கும்பம் 

அவிட்டம் 3,4: திடீர் செலவு ஏற்படும். கையிருப்பு கரையும். அனைத்திலும் நிதானம் அவசியம். சதயம்: இன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம். பூரட்டாதி 1,2,3: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மீனம் 

பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். நவீன பொருட்கள் வாங்குவீர். உத்திரட்டாதி: பிறரை அனுசரித்துச் சென்று உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர். ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பு உயரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!