பிரித்தானியாவின் சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு
#people
#Warning
#Climate
#England
#Wind
#L4
Prasu
1 hour ago
பிரித்தானியாவின் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் காற்று 50–60 மைல் வேகத்திற்கு உயரக்கூடும் என்பதுடன் ஹெப்ரைட்ஸ் பகுதியில் சில நேரங்களில் மிகவும் வலுவாக வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஸ்கொட்டிஷ் படகுகளில் தாமதங்கள் அல்லது இரத்து செய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் புறப்படுவதற்கு முன் பயண அறிவிப்புகளை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
வடக்கு இங்கிலாந்து, வடக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் வடக்கு வேல்ஸில் காலை வரை காற்று அதிகரிக்கும்; பிற்பகல் வரை காற்று உச்சத்தை எட்டாது, ஆனால் சில இடங்களில் 70 மைல் வேகத்திற்கு மேல் காற்று வீசக்கூடும்.
(வீடியோ இங்கே )