உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை என அறிவிப்பு!!

#SriLanka #Easter Sunday Attack #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை என அறிவிப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றவில்லை எனவும் சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், சுரேஷ் சலே 2016 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறியதுடன், மீண்டும் 2018 டிசம்பர் மாதத்திலேயே நாட்டிற்குத் திரும்பினார்.

அத்தோடு 2019 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், அவர் இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் படைகளின் பதவி நிலை கல்லூரியில் (Defence Services Staff College) இராணுவப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரே சுரேஷ் சலே மீண்டும் இலங்கை திரும்பினார். அதன் பின்னரே அவர் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று முடிந்த பின்னரே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பதை சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம இதன்போது சுட்டிக்காட்டினார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4