பொருளாதாரத்திற்குப் புதிய அச்சுறுத்தல்: சஜித் பிரேமதாச விடுத்துள்ள எச்சரிக்கை.

#SriLanka #Sajith Premadasa #economy #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
பொருளாதாரத்திற்குப் புதிய அச்சுறுத்தல்: சஜித் பிரேமதாச விடுத்துள்ள எச்சரிக்கை.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக, வெளிநாட்டுக் கொள்கை ஆய்வாளர்கள், முன்னாள் இராஜதந்திரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவசரக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இலங்கை தற்போதுதான் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பிலிருந்து மீண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய கிழக்கு பதற்றங்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை நேரடியாகப் பாதிப்பதாக எச்சரித்தார்.

கடந்த மார்ச் 4 ஆம் திகதி, காலி கடற்பரப்பில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பலான ஐரிஸ் டெனா மூழ்கடிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, உலகளாவிய மோதல்கள் இலங்கையின் எல்லைக்கு மிக அருகில் வந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

இந்தச் சூழலை எதிர்கொள்ள PSOP (Peace and Security, Stability, Order, Prosperity) எனும் புதிய கொள்கை முன்னெடுப்பை அவர் அறிவித்தார். இதன் கீழ் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய 4 முக்கிய அம்சங்களை அவர் முன்வைத்தார்.

தேசிய எரிசக்தி அவசரகால நிலை இலங்கையிடம் தற்போது ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளது. 

ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளில் தடைகள் ஏற்பட்டால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும். 

எனவே, சூரிய மற்றும் காற்று மின்சக்தி திட்டங்களை விரைவுபடுத்தி, இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கான தங்கியிருப்பைக் குறைக்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பணம் அனுப்புதல் மத்திய கிழக்கில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.

2025 ஆம் ஆண்டில் அவர்கள் சாதனை அளவாக 8.076 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். பிராந்திய வங்கி வலையமைப்புகள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் பாதுகாப்பாக பணம் அனுப்பக்கூடிய நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான காப்பு நிதி அமைப்பை உருவாக்க வேண்டும்.

ஏற்றுமதி பொருளாதாரத்தைப் பாதுகாத்தல் ஐரிஸ் டெனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கப்பல் காப்புறுதி கட்டணங்கள் 750,000 டொலர் வரை அதிகரித்துள்ளன. 

இதனால் தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருக்க, அரச அனுசரணையுடன் கூடிய கடல்சார் காப்புறுதி நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4