உலகளாவிய எரிசக்தி நெருக்கடி : அமெரிக்காவின் அதிரடி முடிவு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தனது மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களில் (Strategic Petroleum Reserve) இருந்து 172 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை வெளியிடவுள்ளது.
சர்வதேச எரிசக்தி முகவரகம் அறிவித்துள்ள ஒட்டுமொத்த 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் வெளியீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை, அடுத்த வாரம் தொடங்கி சுமார் 120 நாட்களுக்குள் சந்தைக்கு வந்து சேரும் என அமெரிக்க எரிசக்தி துறை தெரிவித்துள்ளது. கடந்த 6ஆம் திகதி நிலவரப்படி 415 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை மூலோபாய பெட்ரோலிய இருப்பாகக் கொண்டுள்ள அமெரிக்கா, தற்போது வெளியிடப்படும் இருப்பிற்குப் பதிலாக அடுத்த ஒரு வருடத்திற்குள் 200 மில்லியன் பீப்பாய் புதிய இருப்பை மீண்டும் நிரப்பத் திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக இத்தகைய இருப்புக்களை நிரப்ப மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படும் போதிலும், இம்முறை வரி செலுத்துவோருக்கு எந்தவிதச் செலவும் இன்றி இந்த மீள் நிரப்புதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கில் ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் விநியோகம் முடக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைப் போக்கவும், விலையேற்றத்தைத் தடுத்து உலகப் பொருளாதாரத்தைச் சமநிலைப்படுத்தவும் இந்த உலகளாவிய ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள
(வீடியோ இங்கே )