லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

#SriLanka #prices #government #Laugfs gas #L4
Prasu
4 months ago
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

இலங்கையில் ‘லாஃப்ஸ் ’ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று (10) அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே இன்று(11) லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ எடையுடை சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,630 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1, 862 ரூபாவாகும்.

சர்வதேச சந்தை விலை நிலைவரத்துக்கு அமையவே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4