கனடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

#Canada #Warning #Climate #Snow #L4
Prasu
1 hour ago
கனடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

வசந்த காலம் தொடங்கியதுடன் வெப்பநிலை உயர்ந்து பனிக்கட்டி உருகி வருவதால், கனடாவின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாடடர்லு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல், தொழில் மற்றும் மேம்பாட்டு பாடநெறி பேராசிரியர் ஜேசன் திட்செல்வாத்தி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கனடாவில் வெள்ளம் என்பது எப்போதும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. தற்போது வெப்பநிலை திடீரென அதிகரிப்பதால் பனிக்கட்டி வேகமாக உருகும். 

அதே நேரத்தில் மழை பெய்தால், உறைந்தும் நீரால் நனைந்தும் இருக்கும் நிலம் அந்த நீரை உறிஞ்ச முடியாது,” என்று அவர் கூறினார்.

இதனால் நீர் கீழ்நிலப் பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நகரங்களில் வீடுகளின் அடித்தளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!