இன்றைய ராசிபலன் (10.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (10.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பரணி: சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். கார்த்திகை 1: வேலைப்பளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில மாற்றம் ஏற்படும். ரோகிணி: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மிருகசீரிடம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகமாக செயல்படுவீர். திருவாதிரை: தடைபட்ட வருவாய் வரும். இழுபறியாக இருந்த பிரச்னையில் முடிவு கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பூசம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். நட்புகளால் உங்கள் வேலை நடந்தேறும். ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.

சிம்மம்

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தாய்வழி உறவினரால் சங்கடம் தோன்றும். பூரம்: செலவு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். உத்திரம் 1: வேலைப்பளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் தடை ஏற்படும்.

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும். அஸ்தம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். சித்திரை 1,2: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சியில் லாபம் காண்பீர்.

துலாம்

சித்திரை 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனம் தேவை. சுவாதி: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். விசாகம் 1,2,3: ஆறாமிட சனியால் நீண்டநாள் பிரச்னை தீரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

 விசாகம் 4: குழப்பம் தவிர்த்து செயல்படுவதால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். அனுஷம்: வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பணியிடத்தில் பிரச்னை உண்டாகும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பூராடம்: காணாமல் போன பொருள் கிடைக்கும். வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக சரி பார்க்கவும். உத்திராடம் 1: எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர். திருவோணம்: சகாய சனியால் நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். அவிட்டம் 1,2: நண்பர்கள் ஆதரவால் பிரச்னை தீரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். சதயம்: இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். 

மீனம்

பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உத்திரட்டாதி: உறவினர் வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனதில் நிம்மதி உண்டாகும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!