எரிசக்தி நெருக்கடி: ஜி7 நாடுகளின் அவசர எண்ணெய் பகிர்வுத் திட்டம்!

#SriLanka #Country #Oil #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
5 months ago
எரிசக்தி நெருக்கடி: ஜி7 நாடுகளின் அவசர எண்ணெய் பகிர்வுத் திட்டம்!

சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, தமது அவசரக்கால எண்ணெய் இருப்புகளை (Emergency Oil Reserves) கூட்டாக வெளியிடுவது குறித்து ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் இன்று (9) ஆலோசனை நடத்தவுள்ளனர்.

சர்வதேச எரிசக்தி முகமையுடன் (IEA) ஒருங்கிணைந்து, இந்த எண்ணெய் இருப்புகளைச் சந்தைக்கு விடுவிப்பது குறித்து 'பைனான்சியல் டைம்ஸ்' (Financial Times) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட மூன்று ஜி7 நாடுகள் ஏற்கனவே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் மசகு எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும், விநியோகத் தடையைச் சீர்செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இன்றைய ஆலோசனையின் முடிவில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4