வளைகுடா போரால் கப்பல் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்!

#SriLanka #Ship #Gulf #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 months ago
வளைகுடா போரால் கப்பல் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்!

 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரான் மீதான யுத்தம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிலைமை தொடரும் சூழலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தையும் உலகளாவிய சந்தை வியாபாரப் பொருட்களையும் மறைமுகமாகத் தாக்குமெனவும் குறிப்பாக, இலங்கைக்கு இந்நிலைமை ஏற்படுமெனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள் விநியோகச் சங்கிலியின் தடங்கலால் கடல் மார்க்க வர்த்தகக் கட்டணம் பெருமளவில் அதிகரிக்குமென கடல் போக்குவரத்து கொழும்பு பயிற்சி நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் மாசகொரல்ல தெரிவித்தார்.

இந்நிலைமை இம்மாத இறுதியில் நிச்சயம் எதிரொலிக்கும். இக்காலாண்டில் பொருட்களுக்கான சந்தைத் தட்டுப்பாடு ஏற்படும். பல பொருட்கள் விலை அதிகரிப்பை தற்போதே காண்பித்துள்ளன. 

யுத்தம் நீடித்தால் விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தி உட்கட்டமைப்பு வசதி சீரழிவை ஏற்படுத்தும்.

யுத்தம் நிலவும் பிரச்சினைக்குரிய கடல் மார்க்கத்தில் ஏற்கனவே எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனால் எரிபொருள் சந்தை விலை அதிகரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.


செய்திகளை அறிய தொடர்ந்தும்   https://www.lanka4.com/   ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4