இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு ஜே.வி.பியேதான் முழுக் காரணம்! - ரணில் விமர்சனம்

#SriLanka #Ranil wickremesinghe #AnuraKumaraDissanayake #NPP
Soruban
13 hours ago
இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு ஜே.வி.பியேதான் முழுக் காரணம்! - ரணில் விமர்சனம்
சர்வதேச விவகாரங்களில் தற்போதைய அரசு ஓர் 'ஊமையைப் போல்' மௌனம் காப்பதாகவும், ஜே.வி.பி. கடந்த காலங்களில் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளே இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

"எண்ணெய் சேமிப்பு முறைகள் என்பது காலங்காலமாகப் பயன்பாட்டில் உள்ளவை. முதலில் அமெரிக்க நிறுவனங்களுடனும், பின்னர் எண்ணெய் கூட்டுத்தாபனத்துடனும் நாம் இவற்றை முன்னெடுத்து வந்தோம்.

2003 ஆம் ஆண்டில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க நான் முயற்சி செய்தேன். அன்றே அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், இலங்கைக்கு இன்று இவ்வளவு பெரிய நெருக்கடி வந்திருக்காது. எண்ணெய் தாராளமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அதனை எதிர்த்தது யார்? ஜே.வி.பிதான். அதனை எம்மால் மறக்க முடியாது." - என்றும் சாடினார்.

மேலும், 2015ஆம் ஆண்டிலும் இத்திட்டம் ஜே.வி.பியால் தடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டிய விசாகப்பட்டினம் - இலங்கை இடையிலான எண்ணெய் குழாய் திட்டத்தையும் அநுரகுமார தலைமையிலான தரப்பினரே முடக்கினர் என்றும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!