இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்? - மத்திய வங்கி ஆளுநர் கருத்து!
#SriLanka
#Central Bank
#Governor
#Economic
#ADDA
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
1 hour ago
இலங்கை சந்தித்த பொருளாதார சரிவு என்பது தவிர்க்க முடியாதது அல்ல என்றும், சரியான நேரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் இத்தகையதொரு பேரழிவைத் தடுத்திருக்க முடியும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த வெளிப்படையான மதிப்பீட்டை வழங்கிய ஆளுநர், "இந்தச் சீர்திருத்தத் திட்டத்தை நாம் ஓராண்டுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியிருந்தால், இத்தகையதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்க மாட்டோம்.
அப்படியொரு நெருக்கடி பற்றி எவரும் பேசியிருக்க மாட்டார்கள்," என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்