இன்றைய ராசிபலன் (07.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஒத்துழைப்பு வேலைகளை வெற்றியாக்கும். பரணி: திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ரோகிணி: உங்கள் புத்தி சாதுரியம் வெளிப்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மிருகசீரிடம் 1,2: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தடைகள் விலகும் நாள். தாராளமாக செலவுகள் செய்து மகிழ்வீர். திருவாதிரை: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செயல்கள் லாபமாகும். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். பிள்ளைகள் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.
கடகம்
புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உதவி கேட்டு வந்தவர்களுக்கு முடிந்ததை செய்வீர்கள். பூசம்: வேலைப்பளு கூடும் என்றாலும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். பாக்ய சனியால் உங்கள் நிலை உயரும்.
சிம்மம்
மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். பூரம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திரம் 1: பூர்வீக சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும்.
கன்னி
உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். சித்திரை 1,2: நினைத்ததை முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.
துலாம்
சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். சுவாதி: தடைபட்ட வேலை நடந்தேறும் என்றாலும், மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். விசாகம் 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் தொலைத்தொடர்பு எல்லைக்கப்பால் செல்வார்கள்.
விருச்சிகம்
விசாகம் 4: செலவுகள் வழியே மகிழ்ச்சி அடையும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அனுஷம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று எளிதாக நடந்தேறும். கேட்டை: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு
மூலம்: அதிர்ஷ்டமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூராடம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உத்திராடம் 1: மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடித்துக்காட்டுவீர்.
மகரம்
உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவோணம்: வியாபார நிமித்தமாக வெளியூருக்கு செல்வீர். பணத் தட்டுப்பாடு நீங்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனி பகவானை வழிபட நன்மை கூடும்.
கும்பம்
அவிட்டம் 3,4: சங்கடம் நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். சதயம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.
மீனம்
பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.
உத்திரட்டாதி: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப்படுத்துவர்.
ரேவதி: வேலைகளில் கவனம் செலுத்துவதும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நன்மையாகும்.
(வீடியோ இங்கே )