இஸ்ரேலில் உள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி: இஸ்ரேலிய, ஈரானிய அமைச்சர்களுடன் விஜித ஹேரத் ஆலோசனை
#SriLanka
#War
#Vijitha Herath
#IranVsIsrael
Soruban
3 hours ago
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000 இலங்கையர்களின் நலம் குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.
"வெளிநாடுகளில் உள்ள நமது குடிமக்களைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும். இன்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) உடன் தொலைபேசியில் உரையாடினேன். இதன்போது, இஸ்ரேலில் உள்ள 29,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்துக் கேட்டறிந்தேன்" எனதனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.