ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு பாதிப்பில்லை: சர்வதேச அணுசக்தி முகவரகம் தகவல்!

#America #world_news #Israel #War #Iran #Iraq #Nuclear #ImportantNews #power_generation #IranVsIsrael
Lakhi
3 months ago
ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு பாதிப்பில்லை: சர்வதேச அணுசக்தி முகவரகம் தகவல்!

ஈரானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையங்களுக்கும் தற்போதைய சூழலில் பாதிப்பு ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதிநவீன செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அணுசக்தி பொருட்கள் உள்ள கட்டடங்கள் சேதமடையவில்லை என்பதும், கதிரியக்க கசிவு ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இஸ்ஃபஹான் (Isfahan) அணுசக்தி நிலையத்திற்கு அருகே உள்ள இரண்டு கட்டடங்களில் மட்டும் சேதங்கள் தென்படுவதாகவும், நடான்ஸ் (Natanz) மற்றும் புஷெர் (Bushehr) போன்ற பிற முக்கிய அணுமின் நிலையங்களில் புதிய பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கதிரியக்க விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என சர்வதேச அணுசக்தி முகவரகம் தலைமை பணிப்பாளர் ரஃபேல் குரோசி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4