அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலுக்கு ஒத்துழைக்க ஸ்பெயின் ஒப்புதல்!

#America #world_news #Israel #War #Iran #Iraq #Military #supporters #Spain #IranVsIsrael
Lakhi
3 months ago
அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலுக்கு ஒத்துழைக்க ஸ்பெயின் ஒப்புதல்!

ஸ்பெயின் மீது வர்த்தகத் தடையை விதிக்கப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க ஸ்பெயின் ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஸ்பெயினைப் பொறுத்தவரை, ஜனாதிபதியின் செய்தியை அவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன்" என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கரோலின் லெவிட் கூறியுள்ளார். முன்னதாக, ஐக்கிய நாடுகளின் சாசனத்துக்கு உட்பட்டிராத எந்தவொரு தாக்குதலுக்கும், இரு நாடுகளுக்கும் பொதுவான தெற்கு ஸ்பெயினில் உள்ள இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் என்று ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மனுவல் அல்பாரஸ் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக "ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பேன்" என்று செவ்வாயன்று ட்ரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் புதிய தகவல் குறித்து ஸ்பெயின் தரப்பிலிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4