இன்றைய ராசிபலன் (05.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (05.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: ஆறாமிட சந்திரனால் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். பரணி: குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கார்த்திகை 1: அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: போட்டிகளை சந்திக்கும் நாள். வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம். ரோகிணி: வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகளை சரிசெய்வீர். மிருகசீரிடம் 1,2: பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உடன் பணிபுரிபவரால் நெருக்கடிக்கு ஆளாவீர். திருவாதிரை: திடீர் வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். மனம் சோர்வடையும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: வரவு அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.

சிம்மம் 

மகம்: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர். பூரம்: பணியிட நெருக்கடி நீங்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள். உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர்கள். உறவினர்கள் தேவையை நிறைவேற்றுவீர். 

கன்னி 

உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். அஸ்தம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை. சித்திரை 1,2: செயல்களில் சங்கடம் உண்டாகும். வேலையில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்

சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம். சுவாதி: வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். விரய சந்திரனால் அலைச்சல் அதிகரிக்கும். 

விருச்சிகம்

விசாகம் 4: அவசர வேலை ஏற்பட்டு உங்களை அலைக்கழிக்கும். புதிய முயற்சியில் நிதானம் அவசியம். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். கேட்டை: பெரியோரை சந்தித்து தடைபட்டிருந்த வேலைகளை முடித்துக் கொள்வீர்.

தனுசு 

மூலம்: நன்மையான நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூராடம்: பூர்வீக சொத்து பிரச்னையை பேசித்தீர்ப்பீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உத்திராடம் 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். 

மகரம் 

உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். மனதில் இருந்த பயமும் குழப்பமும் விலகும். திருவோணம்: பெரியோரை சந்தித்து உதவி பெறுவீர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். 

கும்பம் 

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். 

மீனம்

பூரட்டாதி 4: வேலைகளில் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உத்திரட்டாதி: நண்பர்கள் உதவியுடன் வேலையை முடிப்பீர். நெருக்கடி நீங்கும். ரேவதி: எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் கூடும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!