ஈரான் போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமெரிக்கா

#America #Attack #Iran #Ship #L4
Prasu
3 months ago
ஈரான் போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமெரிக்கா

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலிலேயே ஈரான் போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பகுதியில் வைத்தே (இந்து சமுத்திரத்தில்) ஈரான் கப்பல் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானது.

போர்க் கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளானதை என்ற தகவலை மட்டுமே வெளியிட்ட இலங்கை கடற்படை, தாக்குதலுக்கு இலக்கானதா என்பது பற்றி உறுதியாக கூறவில்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அமெரிக்க தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதி நவீன தொழில்நுட்பங்களுடன் ஈரானின் சொந்த தயாரிப்பிலேயே மேற்படி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4