கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டிக்குள் சடலம் மீட்பு!

#SriLanka #Death #Murder #three-wheeler #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டிக்குள் சடலம் மீட்பு!

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி வீதியில், கருச சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கி அமைந்துள்ள வீரபுரன் அப்பு வித்தியாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திற்கு அடியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து விடுதலையாகி 21 நாட்களுக்கு பின்னரே இவர் வீடு திரும்பியுள்ளார். 

சடலம் இருந்த இடத்தை கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு ஆய்வு கூட திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டதுடன், மொரட்டுவை பிரதான நீதவான் சம்பத் கமகே வருகை தந்து ஸ்தல ஆய்வை மேற்கொண்டார். 

சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு மரண பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

மேலும், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மொரட்டுவை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4