அமெரிக்க-ஈரானிய போர் பதற்றத்துக்கு மத்தியில் யுக்ரைன் ஜனாதிபதி திடீர் பிரவேசம்

#America #world_news #Ukraine #War #President #Iran #Iraq #ImportantNews #Visit #IranVsIsrael
Lakhi
3 months ago
அமெரிக்க-ஈரானிய போர் பதற்றத்துக்கு மத்தியில் யுக்ரைன் ஜனாதிபதி திடீர் பிரவேசம்

யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கிஇ ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோருடன் ஈரானியத் தாக்குதல்கள் குறித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதால்இ அவற்றை முறியடிப்பதில் யுக்ரைன் சிறந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்தச் சூழலில் தாம் எவ்வாறு உதவலாம் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதில் ஆதரவளிக்கலாம் என்பது குறித்து விவாதித்ததாக. அமீரகத் தலைவருடனான உரையாடலுக்குப் பின் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், பொது மக்களுக்குப் கூடுதல் பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது என்பதைத் தீர்மானிக்க கட்டார் நாட்டுத் தொழில்நுட்பக் குழுக்களும் தமது நாட்டுடன் தொடர்பில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஷ்யாவுடன் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்குப் பங்காளிகள் உதவினால்இ ஈரானிய ஆளில்லா வானூர்திகளை சுட்டு வீழ்த்துவதற்குத் தேவையான நிபுணர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4